முத்துப்பேட்டை சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவில் இஃப்தார் விருந்து அளிக்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறுகின்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு இஃப்தார் விருந்து அளிக்கிறார்.

கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் புரட்சித்தலைவி அம்மா, ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திவந்தார் - அதேபோன்று, இந்த ஆண்டும், இஸ்லாமியப் பெருமக்களை கௌரவிக்கும் வகையில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகின்ற 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 05.00 மணியளவில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள, உலகப் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவில் இஃப்தார்விருந்து அளிக்க இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனித நிகழ்வில் இஸ்லாமியப் பெருமக்களும், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளும், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் பயணிக்கும் கழகத்தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதிமதபேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day