எழுத்தின் அளவு: அ+ அ- அ
செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஒன்றியக் கழக முன்னாள் கவுன்சிலரும், பரங்கிமலை ஒன்றியக் கழக முன்னாள் அவைத்தலைவருமான திரு.M.G. சோமசுந்தரம் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதிவில், செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஒன்றியக் கழக முன்னாள் கவுன்சிலரும், பரங்கிமலை ஒன்றியக் கழக முன்னாள் அவைத்தலைவருமான திரு.M.G. சோமசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு.சோமசுந்தரத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.