முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.O.R.ராமச்சந்திரன் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.O.R.ராமச்சந்திரன் உயிரிழந்தது குறித்து, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.O.R.ராமச்சந்திரன் உயிரிழந்தது குறித்து வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். 

திரு.O.R.ராமச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும், புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day