எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், முன்னாள் பிரதமருமான திரு.மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், இந்திய தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், முன்னாள் பிரதமருமான திரு.மன்மோகன் சிங் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய திரு.மன்மோகன் சிங் அவளது மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கடுமையான நெருக்கடியை சந்தித்த போது, இந்திய பொருளாதாரத்தை தூக்கி பிடித்தவர் திரு.மன்மோகன் சிங் என்ற நிதர்சனத்தை யாராலும் மறுக்க முடியாது என்றும், திரு.மன்மோகன் சிங் அவர்கள் பல்வேறு முக்கிய பதவிகளில் வகித்தபோதும் மிகுந்த அமைதியையும், எளிமையையும் கடைப்பிடித்தவர் என்றும், கட்சி பேதமின்றி அனைவரையும் சமமாக மதிக்கக்கூடியவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களும், திரு.மன்மோகன் சிங் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்ப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனரான திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.