மும்பையில் நடிகை ஐஸ்வர்யா ராய் கார் விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில், நடிகை ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் வீட்டினருகே அவரது சொகுசு கார் மீது மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் பின்பகுதி லேசாக சேதமடைந்தது. எனினும், விபத்துக்குள்ளான சமயத்தில் காரில் நடிகை ஐஸ்வர்யா ராய் பயணிக்கவில்லை என்றும் ஓட்டுநர் மட்டுமே சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day