தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட்டை வழங்கியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான முருகன், லண்டன் செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க முயன்றார். ஆனால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவை என்பதால், தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி, முருகன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்குல் மத்திய அரசு அனுமதித்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், தனியாக அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை தள்ளுபடி செய்தார்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...