முல்லைநகர் மக்கள் போராட்டம் - சின்னம்மா சார்பில் ஆதரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் 60 ஆண்டுகளாக குடியிருக்‍கும் வீடுகளை இடிக்‍க எதிர்ப்பு தெரிவித்து 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைநகர் பகுதி மக்களை நேரில் சந்தித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் கழக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகர் பீ.பி.குளம் முல்லை நகர், நேதாஜிமெயின்ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2 ஆயிரத்து 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிய திமுக அரசை கண்டித்தும், பட்டா வழங்கக்கோரியும், முல்லை நகர் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லை நகர் மக்களை அப்புறப்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், முல்லைநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், பள்ளி மாணாக்கர்கள் 8ஆவது நாளாக தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் அம்மக்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் கழக நிர்வாகி சுரேஷ் தலைமையில் ஏராளமான கழகத்தினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
 
அப்போது, முல்லை நகர் பிரச்சனைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவர் புரட்சித்தாய் சின்னம்மா என கழக நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். ஆளும்கட்சியினர் தங்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாகவும், வெற்றி பெற்ற பின்னர் தங்களை திரும்​பிக்‍ கூட பார்ப்பதில்லை என்றும் முல்லை நகர் மக்கள் வேதனை தெரிவித்தனர். 

Night
Day