எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை பி.பி.குளம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லை நகரி குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் குடிநீர் உட்பட அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், பி.பி.குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீர்வளத்துறைசார்பில் முல்லை நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற நாளைவரை அவகாசம் வழங்கி நோட்டீஸ் ஒட்டியுள்ளது. இந்நிலையில் 60ஆண்டாக வசித்த வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், பட்டா வழங்குவதாக எம்எல்ஏ ஏமாற்றியதைக் கண்டித்தும் மக்கள் வீடுகளின் முன்பு அமர்ந்து நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.