முல்லைபெரியாறு அணை பகுதியில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

முல்லைபெரியாறு அணை பகுதியில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழு ஆய்வு மேற்கொண்டது.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு மற்றும் துணை குழு கடந்த 2024 நவம்பர் 21ம் தேதி கலைக்கப்பட்டு, அன்றே முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த குழு தலைவராக உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் ஆய்வு செய்தனர். தமிழக அரசு சார்பில் நீர்வளதுறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பாக கூடுதல் தலைமை செயலாளர் பிஸ்வால்,
நீர் வள துறை தலைமை பொறியாளர் பிரியேஸ், மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி விவேக் திருப்பதி, தென்மண்டல இயக்குநர் கிரிதரன் உள்ளிட்டோர் கொண்ட குழு ஆய்வு செய்தனர்.

பிரதான அணை, பேபி டேம், மதகு பகுதிகள், இரண்டு சுரங்கப் பகுதிகளில் ஆய்வு நடைபெறுகிறது. மேலும் நீர் வரத்து, நீர்மட்டம் நீர்மட்டத்திற்கேற்ப உள்ள நீர் அழுத்தம், நீர் அழுத்தத்திற்கு ஏற்ப சுரங்கப் பகுதிகளில் நீர் கசிவு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.

மேலும் இப்பகுதியை சுற்றி கடந்த காலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறதா, ஏற்பட்டிருந்தால் அதன் அளவு உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்கின்றனர். மதகுகள் அனைத்தும் நல்ல முறையமுறையில் இயங்குகிறதா என்றும், பராமரிப்பு பணிகள் செய்யவேண்டியது என்ன என்பதையும் இக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர். தீவிரவாத இயக்கங்களால் அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அணை பகுதியில் கள ஆய்விற்கு பின் ஆய்வுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

Night
Day