எழுத்தின் அளவு: அ+ அ- அ
முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை வழக்கில், கேரளஅரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் முல்லைபெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்றும், 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க உரிமை உள்ளாக சுட்டிக்காட்டியது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவை கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வால் அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு மற்றும் ஆணையின் மூலம் நீடித்து நிலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணை மூலம் ஏற்கனவே இருந்த முல்லைபெரியாறு அணை மேற்பார்வை குழு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு கலைப்பது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளது. எனவே 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பாணை தீர்ப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென்று கேரள அரசு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.