பிரபல சட்ட நிபுணரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவருமான ஃபாலி நரிமன் மறைவு குறித்து, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நரிமன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக திகழ்ந்த ஃபாலி நரிமனின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஃபாலி நரிமன், 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் பணியில் திறம்பட செயலாற்றியவர் - பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் - உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் சிறப்புடன் பணிகளை ஆற்றியவர் - புரட்சித்தலைவி அம்மாவை தனது மகளாக கருதி மிகவும் பாசத்தோடு பழகியவர் - புரட்சித்தலைவி அம்மாவும் ஃபாலி நரிமன் மீது மிகுந்த அன்பு வைத்து இருந்தார் - ஃபாலி நரிமன் தங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமையடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பயணித்த நீதித்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.