மேட்டூர் அணையில் இருந்து 1.50 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், நீர் இருப்பு தற்போது 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

Night
Day