மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் 28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

உதகை, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பில் வைக்கவும், கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்த உயர்நீதிமன்றம், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என மோட்டார் வாகன சட்டத்தில் நிபந்தனையை சேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Night
Day