மேற்கு வங்கம் ரயில் விபத்து - சின்னம்மா இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 8 நபர்கள்  உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருவது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மேற்கு வங்க மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும், மேலும், இது போன்ற விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை உரிய விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 25க்கும் மேற்பட்டோர் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day