மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட்டதிற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வழிபட மறுப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தியதால் ஊர் மக்கள் கோயிலுக்கு வர மறுப்பு தெரிவித்த நிலையில் கோவில் நடை மூடப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே மோதல் தொடர்பான வழக்கில், இருசமுதாய மக்களுக்கும் வழிபாடு நடத்த அனுமதி அளித்து அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருசமுதாய மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிலையில் நேற்று 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று காலை ஊர்மக்கள் வழிபாடு நடத்தவிருப்பதாக அறிவித்த நிலையில் கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. 

ஆனால் 7 மணி வரையில் யாரும் வராததையடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது வருவாய் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள திரெளபதி அம்மன் கோயில் நாள்தோறும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் கோயில் நடை திறக்கப்படும் என்றும் அப்போது விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கோயிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்லலாம் என வருவாய் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் மேல்பாதி கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Night
Day