மே.4ஆம் தேதி தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வெப்பம் தகிக்கும் நிலையில் வரும் 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அந்த வகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிய நிலையில், வருகின்ற 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Night
Day