எழுத்தின் அளவு: அ+ அ- அ
நமது தாய் மொழியாம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை நீத்த, மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினத்தில் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்திடுவோம் என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.
இது குறித்து புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று வீர முழக்கமிட்டு, விஷம் அருந்தியும், தூக்கிட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியும் உயிர்நீத்த மாணவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தி, தியாகிகளின் பெருமைகளையும், நம் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளதை இந்நேரத்தில் பெருமையோடு எண்ணிப்பார்ப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா கூறியுள்ளார்.
அறிஞர் அண்ணாவின் வழியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வழியில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தஞ்சையில் 1995ம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடத்தி. நம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்ததையும் இந்நாளில் நினைவுகூற விரும்புவதாக புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.
அன்னைத் தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றிடும் வகையில், கழகத் தொண்டர்கள், குறிப்பாக மாணவச் செல்வங்கள் அனைவரும், தியாக செம்மல்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, தமிழ் மொழியின் சிறப்புகளை மென்மேலும் உயர்த்திட உறுதியேற்றிடுவோம் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.