அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த்துக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த்துக்கு, தன் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த், அவருடைய அன்பினாலும், பாசத்தினாலும் தமிழக மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளார் - ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும், கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், 'சூப்பர் ஸ்டார்' என்ற உச்ச நிலையினை அடைந்தபோதும், எளிமையான அணுகுமுறையினால், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் அவருடைய உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன் - அவரது அன்பும், நட்பும், சகோதரபாசமும் என்றென்றும் நிலைத்திருக்க ஆண்டவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த், நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.