ரம்ஜானை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை - ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.


வரும் 31-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி புகழ்பெற்ற அய்யலூர் ஆட்டுச் சந்தை இன்று களைகட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் குவிந்து தேவையான ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்கிச்சென்றனர். இன்றைய சந்தையில் 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு 9 ஆயிரம் ரூபாய்க்கும், செம்மறி ஆடுகள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இதே போன்று ஒரு கிலோ நாட்டுக்கோழி 450 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 2 கோடிக்கு ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Night
Day