ரம்ஜான் எதிரொலி - ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

ரம்ஜான் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. காலை துவங்கிய சந்தைக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவித்தனர். வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் 8 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
 

Night
Day