ரம்ஜான் பண்டிகையையொட்டி களைகட்டிய ஆடுகள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆட்டுச் சந்தை களைகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நடைபெறும் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டிப்போட்டு கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். செம்மறி ஆடு, தலைச்சேரி ஆடு, நாட்டினம் ஆடு உள்ளிட்ட வகைகள் விற்பனைக்கு வந்தன. ஒரு ஆடு 3,500 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பண்டிகையையொட்டி நடந்த சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால். 


கோவை மாவட்டம் அன்னூர் ஆட்டுச் சந்தை வார இறுதி நாள் மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிகாலை முதலே களைகட்டியது. வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உள்ளிட்ட ஏராளமான பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆட்டு குட்டிகள் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், எடை அதிகமுள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. கர்நாடகா, கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இன்றைய சந்தையில் சுமார் 1 கோடி முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும் என எதிர்பாப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வாரச்சந்தையில் இரண்டு மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது. தியாகதுருகம் வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகளை, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் முந்தியடித்து கொண்டு வாங்கிச் சென்றனர். ரகத்திற்கு ஏற்ப ஆடுகள் ஒவ்வொன்றும் 8,000 ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Night
Day