ரம்ஜான் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் களைகட்டிய ஆடுகள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆட்டுச் சந்தை களைகட்டியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களை கட்டியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். ஆடுகளின் விலை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை 3000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  பண்டிகையையொட்டி ஆட்டு சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 5 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். சுமார் 4 மணி நேரத்திலேயே 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தை களைகட்டியது. சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆடுகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்றது. விடியவிடிய நடைபெற்ற சந்தையில் ஆயிரக்கணக்கில், போயர், தலைச்சேரி, மேச்சேரி, சென்னை சிவப்பு, ராமநாதபுரம் வெள்ளை, வேம்பூர், திருச்சி கருப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் என விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த சிறப்பு சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக ஆட்டு சந்தை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Night
Day