ரயில்வே உயர் அதிகாரிகள் மீது பெண் காவலர் பாலியல் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உயர் அதிகாரிகள் பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் அதற்கு உடன்படாததால் தன்னை பணியிடமாற்றம் செய்ததாகவும் ரயில்வே பெண் காவலர் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே காவல்துறையில் பணியாற்றிய தமிழ்செல்வி, சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் வாட்ஸ் அப் செயலி வாயிலாக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய தமிழ்செல்வி குரல் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் பழனி ரயில்வே காவல் ஆய்வாளர் தூயமணி தன்னிடம் செல்போனில் பேசுமாறும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தன்னையும் ஆய்வாளரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Night
Day