ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் - 9 மாணவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வரை செல்லும் மின்சார ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு நடைமேடையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர், திடீரென கீழே கிடந்த கற்களை கொண்டு, ரயிலில் பயணித்த மற்றொரு கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை கண்ட ரயில் பயணிகள், உடனடியாக ரயிலின் கதவை மூடியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 9 பேரை கைது செய்தனர்.

Night
Day