ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில், அரசுப் பேருந்தின் முகப்பு விளக்கு எரியாததால், பேருந்து கவிழ்ந்து நடந்த விபத்து ஏற்பட்டதால், அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ராமநாதபுரத்தில் இருந்து நல்லிருக்கை கிராமத்திற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென முகப்பு எரியாததால், சாலையின் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது. இதில் பல பயணிகள் படுகாயமடைந்தனர். பேருந்து மோசமான நிலையில் இருந்ததாலேயே இந்த விபத்து நேரிட்டதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்‍கள், விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற ஓட்டுநர் மீது நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசுப் போக்குவரத்து கழக மண்டல மேலாளரை பொதுமக்‍கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day