ராமநாதபுரத்தில் மீனவர்களை மீட்கக்கோரி உறவினர்கள் உண்ணாவிரதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாம்பனில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 நாட்டுப் படகுகள் மற்றும் 35 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்த நிலையில் இலங்கை அரசு புத்தலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 4 நாட்டுப் படகுகளையும் தவறுதலாக விசைப்படகு என குறிப்பிட்டுள்ளதால் மீனவர்களுக்கு 6 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாம்பன் மீன்வளத்துறை அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீனவர் குடும்பங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day