எழுத்தின் அளவு: அ+ அ- அ
கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தப்பி பெய்த தொடர் கனமழை மற்றும் நோய் தாக்குதல் காரணமாக நெல் மற்றும் மிளகாய் பயிர்கள் காய்ந்து சருகானதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், டெல்லியில் உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக ராமநாதபுரம் ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது காய்ந்து கருகிய மிளகாய் செடிகளை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு, மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.