ராமநாதபுரம் மீனவர்கள் 5வது நாளாக காத்திருப்பு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேஸ்வரம்  மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்ககோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவளத்துறை அமைச்சர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மீனவர்கள் இன்று தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் கருவிகளுடன் ஆயத்தமாக உள்ளனர். 

Night
Day