ராமநாதபுரம் : வாக்கு சேகரிக்கச் சென்று மக்களின் புகார்களால் திணறிய திமுக அமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக, வாக்கு சேகரிக்க சென்ற திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 
கடம்போடை கிராமத்தில் வாக்குசேகரிக்க சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை, குடிநீர் முறையாக விநியோகிப்பதில்லை என புகார் தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த திமுகவினர் பொதுமக்களை லாவகமாக அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்தியதால், திமுக அமைச்சரும், முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரும் வாக்குசேகரிப்பை முடித்துக் கொண்டு அவசரமாக புறப்பட்டனர். 

Night
Day