ராமநாதபுரம்: இலங்கை அரசைக் கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதுடன் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதித்து வருகிறது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 20 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day