ராமநாதபுரம்: மீன்வரத்து குறைவாக இருந்தும், மீன் விலை ஏற்றத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன்வரத்து குறைவாக இருந்தாலும் மீன் விலை ஏற்றத்தால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்கள் இன பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் விசைப்படகுகள் துறைமுங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தடைகாலத்தின்போது கடல் உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டுப்படகுகள் கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனர். தடைகாலத்தில் போது அதிகளவில் மீன் கிடைக்கும் என நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்பார்த்த நிலையில், மீன்வரத்து குறைந்தபோதும் மீன் பிரியர்கள் அதிக விலைக்கு மீன்களை வாங்கி செல்வதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

Night
Day