இலங்கையின் ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், இலங்கை கடற்படையினரின் செயலை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 359 விசைப்படகுகளில் அனுமதிச்சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதியதில், ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் மாயமான நிலையில், இருவர் உயிருடனும், ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மாயமான மேலும் ஒரு மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து நேற்று மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வர துறைமுகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இறந்த மலைச்சாமியின் உடலை தாயகம் கொண்டு வரக்கோரியும், மாயமான ஒருவரை தேடும் பணியை துரிதடுப்பத்த வேண்டும் யில் மீட்டு தரக்கோரியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.