ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 338 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை விரட்டியடித்தனர். அப்போது, தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு ராஜா என்பவருக்கு சொந்தமான படகை கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு இலங்கை படையினர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து துறைமுகம் திரும்பிய 2 மீனவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

Night
Day