ரூ.57,000-ஐ நெருங்கும் தங்கம் விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 57 ஆயிரத்தை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 320 உயர்ந்து 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 102 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை எட்டியதால் நகைப்பிரியர்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Night
Day