ரூ.59,000-ஐ நெருங்கிய தங்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி எவ்வித மாற்றம் இன்றி கிராமுக்கு 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள மக்கள், விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Night
Day