லிப்ட் பழுதடைந்து பாதியிலேயே நின்றதால் பொதுமக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

 வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் அதில் சிக்கிகொண்ட பொதுமக்கள் அச்சத்தில் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் இன்ஃபான்ட்ரி சாலையில் செயல்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் வசதிக்காக 2 லிப்டுகள் இயங்கி வரும் நிலையில் இங்குள்ள 2-வது லிப்ட் திடீரென பாதியிலேயே பழுதாகி நின்றது. இதனால் லிப்டில் சிக்கிக் கொண்ட மக்கள் அச்சத்தில் அலறினர். உடனடியாக அங்கிருந்த காவலர் எமர்ஜென்சி சாவியை வைத்து திறந்து லிப்டில் மாட்டிக்கொண்டவர்கள் வெளியேற்றியதை அடுத்து பொதுமக்கள் பெருமூச்சு விட்டனர். மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் முறையாக குடிநீர் கூட வைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day