வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் -குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்றும் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில், நாளை முதல் 10ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day