எழுத்தின் அளவு: அ+ அ- அ
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது 11 மற்றும் 12-ம் தேதிகளில் மேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும், இவை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.