வங்கக்கடலில் நாளை உருவாகிறது 'ரெமல்' புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நாளை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வங்காள தேசத்திற்கு சுமார் 800 கிலோமீட்டார் தென்மேற்கு மற்றும் மேற்கு வங்கத்தின் தெற்கே 810 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை கிழக்கு மத்திய வங்க கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து நாளை மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற்று, மே 26ம் தேதி நள்ளிரவில், சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே கடுமையான சூறாவளியாக கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day