வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள சூழலில், மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடலூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day