வங்கக்கடலில் மே 25ஆம் தேதி உருவாகிறது புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மாறிய பின்னர் 25ம் தேதி தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ரெமல் என பெயர்சூட்டப்பட்டுள்ள இப்புயல் 26-ம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வடக்கு நோக்கி நகரும் போது தமிழகத்தில் மழை குறைந்து, வெப்பம் அதிகரிக்கக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Night
Day