வங்கக்கடலில் வரும் 23ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் அதன்பிறகு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day