வங்கக்கடலில் வரும் 23ம் தேதி உருவாகிறது 'டானா' புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மத்திய அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டானா என்ற பெயரை கத்தார் பரிந்துரைத்துள்ளது. இதனிடையே, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Night
Day