எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி நகர் பகுதிகளில் 5 நாட்களாகியும் வெள்ளநீர் வடியாததால் பாதிக்கப்பட்ட மக்கள் கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருச்சி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்க கூடாது என்பதற்காக மழைநீரை நகர்ப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு திருப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காஜாமலை மெயின்ரோடு, ஜேகே நகர், லூர்துநகர், ரோஜாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், கேகே நகர் - காஜாமலை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, 5 நாட்களாகியும் வெள்ளநீர் வடியாததால் பாதிக்கப்பட்ட மக்கள், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.