வணிகர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டும் திமுகவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பதற்கு பணம் கேட்டு திமுகவினர் மிரட்டல் விடுப்பதால் வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர். 

விழுப்புரத்தில் பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பதற்காக மளிகை கடை, காய்கறி கடை, செல்போன் கடை ஆகியவற்றை  நடத்தி வரும் சிறுவணிகர்களை குறி வைத்து திமுகவினர் மிரட்டி வருகின்றனர். தண்ணீர் பந்தலை திறக்க அமைச்சர் பொன்முடி, திமுக மாவட்ட செயலாளர் ஆகியோர் வர உள்ளதால் குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை தர வேண்டும் என்றும், பண தர மறுத்தால் கடையை மூடி விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நான்குமுனை சிக்னல் அருகில் உள்ள கடையில் உரிமையாளரை  திமுகவினர் மிரட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day