வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருந்த வெள்ளையன், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளையன் இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

varient
Night
Day