வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70 குறைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி, ஜூன் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 840 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி, 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

varient
Night
Day