வணிக சிலிண்டர் சிலை ரூ.12.50 உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. 

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆயிரத்து 924 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் ஆயிரத்து 937 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day