எழுத்தின் அளவு: அ+ அ- அ
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னிகோனந்தல் கிராமத்திற்கு சென்ற கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக நிர்வாகி முத்துப்பாண்டி ஏற்பாட்டில் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் வன்னிகோனந்தல் கிராமத்தில் பட்டாசுகள் வெடித்தும், மலர்கள் தூவியும், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கிராம மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
கிராமத்து பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மலர்கள் தூவியும், பூரண கும்ப மரியாதையுடனும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
நள்ளிரவு 12 மணியை கடந்தும் ஒவ்வொரு கிராமத்திலும் பெருந்திரளான கழக தொண்டர்கள், பெண்கள் மற்றும் இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் கண்விழித்து புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வன்னிகோனேந்தல் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டபோது, அந்த பகுதியில் அவசர மருத்துவ உதவிக்காக சென்ற ஆம்புலன்ஸ்களை புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில், கழக தொண்டர்கள், நொடிப்பொழுதில் கூட்டத்தை ஒதுக்கிவிட்டு பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.
வன்னிக்கோனந்தல் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியின்போது தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளை திமுக அரசு அடுத்தடுத்து மூடி வருவதாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.