வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை விரைந்து மீட்கவேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 180 பேரின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை விரைந்து மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கும் புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதிவில், கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நேற்று அதிகாலை மேப்பாடி, சூரல்மலா, முண்டகையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 180 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், இதில் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிர்ச்சித்தகவல்கள் வருவது மிகவும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை விரைந்து மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

வயநாடு அடுத்த சூரல்மலா பகுதியில் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமே அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏராளமான வீடுகள், கடைகள், பள்ளிக்கூடம் போன்றவைகளும் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகவும் வரும் தகல்வல்கள் மிகுந்த வேதனையை அளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். 

இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாகவும், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day